உங்களில் சிலருக்கு தூக்கத்தில் எச்சில் விடும் பழக்கம் இருக்கும்.இரவு தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் தலையணை மற்றும் வாயில் வெள்ளை கறை படிந்திருக்கும்.குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தூக்கத்தில் எச்சில் விடும் பழக்கத்தால் அவதியடைந்து வருகின்றனர்.
இப்பழக்கம் அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்று தான் என்று அலட்சியமாக கடந்துவிட முடியாது.இரவு தூக்கத்தின் போது நம்மை அறியாமலேயே இந்த எச்சில் விடும் பழக்கம் ஏற்படுகிறது.உடல் நலக் கோளாறு,உமிழ்நீரில் ஒவ்வாமை,சளி,இருமல்,சுவாச நோய்,தொண்டை பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் தூக்கத்தில் எச்சில் விடும் பழக்கம் ஏற்படும்.
அஜீரணக் கோளாறால் அவதியடைந்து வருபவர்களுக்கு உறக்கத்தின் போது வாயில் இருந்து எச்சில் வெளியேறும்.மன அழுத்தம்,வாயை திறந்தபடி உறங்குதல்,ஒருபுறமாக படுத்து உறங்குதல் போன்ற காரணங்களாலும் வாயில் எச்சில் வடியும்.
நீங்கள் அதிகளவு அமில உணவுகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த பாதிப்பு ஏற்படக் கூடும்.தொண்டையில் ஏதேனும் பிரச்சனை இருப்பவர்களுக்கு உறக்க நிலையில் வாயில் இருந்து எச்சில் வெளியேறும்.
தூக்கத்தில் எச்சில் வெளியேறும் பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
1)தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் வெந்நீர் பயன்படுத்தி வாயை கொப்பளித்து வந்தால் எச்சில் விடும் பழக்கம் கட்டுப்படும்.
2)தினமும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் தூக்கத்தில் எச்சில் விடும் பழக்கம் கட்டுப்படும்.
3)ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் தூக்கத்தில் எச்சில் விடும் பழக்கம் கட்டுப்படும்.