குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்க காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான்.இதனால் நோய் தொற்றுகள் எளிதில் பரவி குழந்தைகளை அவஸ்தையடைய செய்து விடுகிறது.குறிப்பாக சளி,இருமல் ஏற்பட்டால் குழந்தைகள் அசௌகரியத்தால் எந்நேரமும் அழுது கொண்டே இருப்பார்கள்.
குழந்தைகளின் உடலில் இருக்கின்ற சளி வெளியேறும் வரை பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கிறார்கள்.உங்கள் குழந்தை சளி தொல்லையால் அவதியடைந்து வந்தால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி தீர்வு காணலாம்.
தேவையான பொருட்கள்:-
1)குப்பைமேனி – பத்து இலை
2)வெற்றிலை – ஒன்று
3)கற்பூரவல்லி – நான்கு
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)மிளகு – நான்கு
செய்முறை:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் பத்து குப்பைமேனி இலையை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
ஸ்டெப் 02:
அதேபோல் நான்கு கற்பூரவல்லி இலை மற்றும் காம்பு நீக்கிய ஒரு வெற்றிலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஸ்டெப் 03:
அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் நான்கு கருப்பு மிளகை ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும்.
ஸ்டெப் 04:
ஒரு உரல் அல்லது மிக்ஸி ஜார் எடுத்து சுத்தம் செய்த குப்பைமேனி இலை,கற்பூரவல்லி இலை மற்றும் வெற்றிலையை சேர்த்துக் கொள்ளவும்.அதன் பின்னர் எடுத்து வைத்திருக்கும் சீரகம் மற்றும் கரு மிளகை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 05:
பின்னர் 50 மில்லி தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு ஒரு காட்டன் துணி அல்லது வடிகட்டி பயன்படுத்தி அரைத்த விழுதில் இருந்து சாறு பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 06:
இந்த சாற்றை லேசாக சூடுபடுத்தி குழந்தைகளுக்கு 5 மில்லி அளவு 3 நாட்களுக்கு கொடுத்து வந்தால் மார்பில் படிந்து கிடக்கும் சளி வாய்,நாசி மற்றும் மலம் வழியாக வெளியேறும். பெரியவர்கள் 50 மில்லி வரை எடுத்துக் கொள்ளலாம்.