இந்து மக்களின் புனித மரமாக போற்றப்படும் ஆலமரத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.இந்த ஆலமரத்தின் தனித்தன்மை என்னவென்றால் அதன் விழுதுகள் தான்.நிலத்தை தொடும் அளவிற்கு வளரும் விழுதுகளால் ஆலமரம் தனித்து காட்சியளிக்கிறது. ஆல மரத்தின் இலை,வேர்,பழம்,விழுதுகள்,பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது.
ஆலமரத்தின் விழுதை தேங்காய் எண்ணெயில்போட்டு ஊறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் நீங்கும்.தலை சூடு குறைய உதவும்.
ஆலமர விழுதை பொடியாக நறுக்கி உலர்த்தி பொடித்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
ஆலமரத்தின் பிஞ்சு வேரை தண்ணீரில் அலசி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து சுத்தமான தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
ஆலமர பழத்தை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.ஆலமர பழம் மற்றும் வேரை அரைத்து பசும் பாலில் கலந்து குடித்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.
ஆலமரத்தின் பட்டையை காய வைத்து பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பற்களின் வலிமை அதிகரிக்கும்.ஆலமர பட்டைத் தூளை பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.ஆலமரத்து பட்டையில் கசாயம் செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.ஆலம் பழத்தை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.