காலையில் வெறும் வயற்றில் கண்ட உணவுகளை சாப்பிட்டு வரும் மக்கள் தேவையில்லாத நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.எண்ணெய் நிறைந்த உணவுகள்,அதிக காரம் மற்றும் இனிப்பு உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது அது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
அதேபோல் சில உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்றாலும் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது பாய்சனாக மாறக் கூடும்.அதன்படி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத சில பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள் சாப்பிட வேண்டியது அவசியம்.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பழங்கள் மூலம் கிடைக்கின்றது என்றாலும் சில பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
1)மாம்பழம்
கோடை சீசன் பழமான மாம்பழம் அனைவரின் விருப்ப பழமாக இருக்கின்றது.மல்கோவா,குண்டு மாங்கா,அல்போன்சா என்று பல ரகத்தில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த மாம்பழத்தில் சர்க்கரை மற்றும் நார்சத்துகள் நிறைந்திருப்பதால் இதை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது செரிமானக் கோளாறு,வயிறு உபாதைகள் ஏற்படும்.
2)தண்ணீர் பழம்
கோடை சீசனில் விளைச்சலுக்கு வரக் கூடிய பழம் தர்ப்பூசணி.இப்பழத்தில் அதிகளவு நீர்சத்துக்கள் நிரப்பி இருப்பதால் கோடை காலத்தில் அவசியம் உண்ண வேண்டிய பழமாக இருக்கின்றது.ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இப்பழத்தை சாப்பிட்டால் வயிறு உப்பசம்,செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
3)வாழைப்பழம்
காலை நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் வயிறு உப்பசம்,வயிற்றுப்போக்கு,இரத்த சர்க்கரை அளவு கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
4)பப்பாளி
காலை நேரத்தில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடும்.
5)அன்னாசிப்பழம்
காலையில் வெறும் வயிற்றில் அன்னாசி பழத்தை எடுத்துக் கொண்டால் வயிறு உபாதைகள் ஏற்படக் கூடும்.
6)ஆப்பிள்
அனைவரும் விரும்பக் கூடிய ஆப்பிள் பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.இதை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.