மகப்பேறு விடுமுறை முடிந்தால் மூன்று ஆண்டுகள் சொந்த பகுதியில் பணியாற்றலாம்! பெண் காவலர்களுக்கு முதல்வர் அதிரடி சலுகை!

0
202
After completing maternity leave, you can work in your own area for three years! Chief Minister's action offer for women guards!
After completing maternity leave, you can work in your own area for three years! Chief Minister's action offer for women guards!

 

 

 

 

DMK: மகப்பேறுக்காக விடுமுறை எடுக்கும் பெண் காவலர்கள் மகப்பேறு விடுமுறை முடிந்த பின்னர் மூன்று ஆண்டுகள் தனது சொந்த ஊரில் பணியாற்றலாம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், அமைச்சர்கள் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார்.

காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கிய பின்னர் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு தற்பொழுது வரை ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு பெண் காவலர்கள் மகப்பேறு விடுமுறை முடித்து பணிக்கு திரும்பும் பொழுது அவர்களின். குழந்தைகளை கவனிப்பது போன்ற பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.இது தொடர்பாக பெண் காவலர்கள் பலரும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பெண் காவலர்களின் மகப்பேறு விடுமுறை முடிந்து மூன்று ஆண்டுகள் அவர்களின் சொந்த பகுதியில் பணியாற்ற உதவி செய்யும் வகையில் அரசு முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து மகப்பேறு விடுமுறை முடியும் பெண் காவலர்களுக்கு அவர்களுடைய கணவர் அல்லது பெற்றோர் வசிக்கும் பகுதியில் பணி வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தடுப்பதற்கும் சைபர் கிரைம் விசாரப்பதற்கும் என்று பெண் காவலர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மக்களை பாதுகாப்பது உங்களுடைய கடமை ஆகும். எனவே மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
இந்த பதக்கங்களுக்கு பின்னால் இருக்கும் உங்களுடைய உழைப்புக்காக தலை வணங்க வேண்டும். அமைதியான மாநிலத்தில் மட்டும் தான் வளர்ச்சியும் வளமும் இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது என்றால் அதற்கு காவலர்கள் உங்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சட்டம் மற்றும் ஒங்கு தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கின்றது. இதனால் தால் தமிழ்நாடு சிறப்பான முன்னணி மாநிலமாக விளங்குகின்றது” என்று கூறினார்.

Previous articleஎனக்கு அதிமுக வேண்டாம்.. என் அண்ணன் தான் வேண்டும்!! விஜய்யுடன் இணையப்போகும் எடப்பாடி மகன்!!
Next articleஎப்பொழுதும் என் கணவர் விட மாட்டார்.. தாய்ப்பாலை திருடி குடித்து விடுவார் – பிரபல ஹீரோ மனைவி ஓபன் டாக்!!