உடல் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் கட்டாயம் பழங்களை சாப்பிடுவார்கள்.நாம் உண்ணும் பழம் ஆரோக்கியமானதாகவும் பட்ஜெட் பிரண்ட்லியாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
அந்தவகையில் ஆப்பிளை விட பல மடங்கு சத்துக்கள் அடங்கிய மலிவு விலை பழமாக கொய்யா உள்ளது.அடிக்கடி கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் மருந்து மாத்திரை இன்றி பல நோய்களை குணமாக்கி கொள்ளலாம்.
கொய்யா பழம் மட்டுமின்றி கொய்யா இலைகளிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.
கொய்யா இலையில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
1)வைட்டமின் சி,பி6
2)மெக்னீசியம்
3)சோடியம்
4)பாஸ்பரஸ்
5)பொட்டாசியம்
6)அயன்
7)ப்ரோடீன்
8)சோடியம்
9)ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,உடல் பருமன்,சளி இருமல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா இலையை மருந்தாக உட்கொண்டு வரலாம்.
கொய்யா இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்படும்.
கொய்யா இலையை அரைத்து சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலில் தேங்கிய கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.
கொய்யா இலையில் டீ செய்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
கொய்யா இலை டீ செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*கொய்யா இலை
*தண்ணீர்
*எலுமிச்சை சாறு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.2 நிமிடங்கள் கழித்து இளம் கொய்யா இலை இரண்டை பொடியாக நறுக்கி சூடான நீரில் போட்டு கொதிக்விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு எதுவும் சேர்க்காமல் பருகினால் மட்டுமே பலன் கிடைக்கும்.