நாக்கில் வரும் தீவிர உபாதை சிவந்த கொப்பளங்களாகும்.நாக்கின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது ஆங்காகே சிறு சிறு சிவந்த கொப்பளங்கள் தோன்றி வலி ,மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.வாயில் வரும் புண்களை விட நாவில் வரும் புண்கள் அதிக வலியை ஏற்படுத்தும்.நாவில் புண்கள் ஏற்பட்டால் உணவு உட்கொள்வதிலும்,தண்ணீர் அருந்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும்.
தினமும் பல் துலக்கும் நாம் நாக்கை சுத்தம் செய்ய தவறுகிறோம்.இதனால் நாவில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் படிந்து நோய் தொற்றுக்களை ஏற்படுத்துகிறது.நாவில் அதிகளவு அழுக்குகள் தேங்குவதால் அவை சில சமயம் வலி தரும் சீழ் கொப்பளங்களை உருவாக்குகிறது.பல் துலக்கிய உடன் டங்க் கிளீனர் பயன்படுத்தி நாக்கில் இருக்கின்ற அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்.
வைட்டமின் ஏ குறைபாடு,இரும்புச்சத்து குறைபாடு,அல்சர் போன்ற காரணங்களால் நாக்கில் கொப்பளங்கள் ஏற்படுகிறது.
நாக்கில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க என்ன செய்ய வேண்டும்?
கல் உப்பை நீரில் கலந்து வாயை கொப்பளித்து வந்தால் நாக்கில் இருக்கின்ற கிருமி தொற்றுகள் அழியும்.
ஒரு ஐஸ்கட்டியை காட்டன் துணியில் வைத்து நாக்கில் கொப்பளம் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி உணர்வு குறையும்.சில தினங்களில் கொப்பளங்கள் மறைந்துவிடும்.
தினமும் இரண்டு முதல் மூன்று முறை டங்க் க்ளீனர் பயன்படுத்தி நாவில் இருக்கின்ற அழுக்குகளை வெளியேற்ற வேண்டும்.