நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும்.உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி சீரான செயல்பாட்டை நிர்வகிப்பதில் கல்லீரல் பங்கு இன்றியமையாதது.
உடலில் புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது.கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் 70% பாதிப்பிற்கு பிறகு நோய் பாதிப்புகள் கண்டறிய முடிகிறது.
மது அருந்துதல்,பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.
உடலில் செரிமான மண்டலத்தை சீராக வைக்கவும்,கல்லீரலை பாதுகாக்கவும் இஞ்சி உதவுகிறது.கல்லீரல் வீக்கத்தை குணமாக்க பெரிய நெல்லிக்காய் உதவுகிறது.கல்லீரலில் இருக்கின்ற கொழுப்புகளை கரைக்க நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.இரும்புச்சத்து நிறைந்த ஆப்பிளை அடிக்கடி உட்கொண்டு வந்தால் கல்லீரல் சீராக செயல்படும்.
உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.திராட்சையில் இருக்கின்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.கல்லீரலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க எலுமிச்சம் பழச் சாறை நீரில் கலந்து குடிக்க வேண்டும்.எலுமிச்சையில் இருக்கின்ற வைட்டமின் சி கல்லீரலில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகளை நீக்க உதவுகிறது.
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.வாழைப்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் கல்லீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.