30 வயதை கடந்த ஆண்களே.. மலட்டு தன்மையை தடுக்க ஆண்மையை அதிகரிக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்!!

Photo of author

By Divya

மலட்டு தன்மை,குழந்தைபேறின்மை,பாலியல் சார்ந்த பிரச்சனைகளால் ஆண்,பெண் இருவரும் பாதிக்கப்படுகின்றனர்.குழந்தைபேறின்மை ஏற்பட பெண்கள் மட்டும் தான் காரணம் என்ற எண்ணம் சமூகத்தில் இருந்து வருகிறது.ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்கள் பாலியல் ஆரோக்கிய குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.

ஆனால் ஆண்களுக்கு வயதாகும் போது பாலியல் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.குறைந்த விந்தணு வெளியேறுதல்,உடலுறவுக்கு பின் சோர்வு,மலட்டு தன்மை,ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.லேட் மேரேஜ் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்படும்.

30 வயதை கடந்த தம்பதிகளுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் அதிகளவு ஏற்படுகிறது.இதனால் கருத்தரிப்பதில் தாமாதம் ஏற்படுகிறது.கருத்தரிக்க விரும்பும் தம்பதிகள் பாலியல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

30 வயதை கடந்த ஆண்,பெண் அனைவரும் உடல் எடையை பராமரிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.உடல் எடை குறைவாக இருந்தாலோ அதிகமாக இருந்தாலோ ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்படும்.சீரற்ற உடல் எடையால் விந்தணு ஆரோக்கியம் பாதிப்படைகிறது.

ஆண்களுக்கு புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.எனவே புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை முழுமையாக தவிர்க்கவும்.

மன அழுத்தம் இருந்தால் விந்தணு உற்பத்தி பாதிக்கக் கூடும்.எனவே பிடித்த செயல்களை செய்து மன அழுத்தத்தை குறைக்க முயலுங்கள்.ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.