இன்று பலருக்கு உருளைக்கிழங்கில் செய்த உணவு என்றால் அலாதி பிரியமாக இருக்கிறது.அசைவ சுவைக்கு நிகரான சுவை உருளைக்கிழங்கில் இருந்து கிடைப்பதால் அனைவரும் விரும்பி உண்கின்றனர்.
உருளைக்கிழங்கு சத்துக்கள்:
நார்ச்சத்து,பொட்டாசியம்,புரதம்,கார்போஹைட்ரேட்,மாவுச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.
உருளைக்கிழங்கில் சிபிஸ்,வறுவல்,போரியல்,குருமா,பிரை,கிரேவி என்று பல வெரைட்டியில் உணவு சமைத்து உண்ணப்படுகிறது.நீங்கள் சில வாங்கும் உருளைக்கிழங்கின் தோல் சிறிது பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.சாதாரண உருளைக்கிழங்கு என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பச்சை நிறம் காணப்படும்.இது உண்ணத் தகுந்தவை.ஆனால் உருளைக்கிழங்கு முழுவதும் பச்சை நிறத்தில் காணப்பட்டாலோ அல்லது வெட்டும் போது அதன் சதை பற்று பச்சை நிறத்தில் இருந்தாலோ அதை பயன்படுத்தக் கூடாது.
பச்சை நிறத்தில் காணப்படும் உருளைக்கிழங்களில் சோலனைன் என்ற நச்சு கலந்திருக்கும்.சோலைனான் பாதித்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் தலைவலி,குமட்டல்,சுவாசப் பிரச்சனை,வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
எனவே உருளைக்கிழங்கில் பச்சை திட்டுகள் வராமல் இருக்க சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் உருளைக்கிழங்குகளை வைக்கக் கூடாது.
உருளைக்கிழங்கு வாங்கியதும் அதை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு அதை காட்டன் துணியில் துடைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.இருண்ட இடத்தில் உருளைக்கிழங்கை வைப்பதால் முளைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.