கூர்மனையான நினைவாற்றல் வேண்டும் என்பது பலரின் ஆசை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு,மோசமான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது.
வயதானவர்கள் மட்டுமின்றி சிறு குழந்தைகளும் ஞாபக மறதி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இதை சரி செய்ய பாதாம்,முந்திரி,பூசணி விதை பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்.
பாதாம் மற்றும் முந்திரி பருப்பில் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது.இது நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.பாலில் கால்சியம்,புரதம்,வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.இது மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
தேவையான பொருட்கள்:
1)முந்திரி
2)பாதாம் பருப்பு
3)பூசணி விதை
4)நாட்டு சர்க்கரை
5)பசும் பால்
செய்முறை:
50 கிராம் முந்திரி பருப்பு மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பை ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
பிறகு 50 கிராம் பூசணி விதையை கடாயில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.இந்த மூன்று பொருளையும் நன்கு ஆறவிடவும்.
அதன் பின்னர் மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து வறுத்த முந்திரி பருப்பு,பாதாம் பருப்பு மற்றும் பூசணி விதைகளை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இந்த பவுடரை ஈரமில்லாத ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மில்லி பசும் பால் சேர்த்து சூடாக்கவும்.
சிறிது நேரம் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு அரைத்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.அடுத்து இனிப்பு சுவைக்காக சிறிது நாட்டு சர்க்கரை போட்டு கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.பெரியவர்களும் இதை குடிக்கலாம்.இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.