கடந்த காலங்களில் வயதானவர்கள் மட்டுமே கண்கள் தொடர்பான பிரச்சனையை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்போதைய சூழலில் சிறு குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை பல் கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கண் கண்ணாடி அணிகின்றனர்.
மின்னணு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துதல்,மோசமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடித்தல் போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே கண் பார்வை இழப்பு உண்டாகிறது.
கண் பார்வையை கூர்மையாக்கும் பாட்டி வைத்தியங்கள் இதோ.
தீர்வு 01:
1)நெல்லிக்காய் – 10
2)கடுக்காய் – 1
கொட்டை நீக்கிய நெல்லிக்காயை நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.அதேபோல் கடுக்காயையும் பொடி செய்து கொள்ளவும்.இல்லையேல் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடி மற்றும் கடுக்காய் பொடியை வாங்கி ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.இதை தினமும் 10 கிராம் அளவு இருவேளை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
தீர்வு 02:
1)பசும்பால்
2)முருங்கை பூ
100 கிராம் முருங்கை பூவை வெயிலில் போட்டு மொரு மொரு பதத்திற்கு காய வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை நைஸ் பவுடராக்கி ஒரு டப்பாவில் கொட்டி சேமிக்கவும்.
சூடான பாலில் 5 கிராம் முருங்கை பூ பொடி கலந்து குடித்து வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
தீர்வு 03:
1)பாதாம் பருப்பு
2)பால்
10 பாதாம் பருப்பை வாணலியில் போட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.பிறகு இதை ஆறவிட்டு பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் கண் பார்வை தெளிவுபெறும்.
தீர்வு 04:
1)கேரட்
2)பனங்கற்கண்டு
3)பால் பவுடர்
4)பாதாம் பருப்பு
இரண்டு பெரிய அளவு கேரட்டை தோல் சீவி மெல்லியதாக நறுக்கி நிழலில் காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் 10 பாதாம் பருப்பு,தேவையான அளவு பனங்கற்கண்டை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் கேரட் பொடி மற்றும் பாதாம் பொடியை ஒன்றாக கலந்து விடவும்.
பின்னர் அதில் 25 கிராம் பால் பவுடர் மிக்ஸ் செய்து கொள்ளவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி கலந்து கொதிக்க வைத்து குடிப்பதால் கண் பார்வை தெளிவுபெறும்.