நெஞ்சு சளி பாடாய் படுத்துகிறதா.. இதோ தாமரை வேரை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!!

0
126
Do you have a cold in your chest.. Try eating lotus root like this!!
Do you have a cold in your chest.. Try eating lotus root like this!!

ஆன்மீகத்தில் தாமரை பூவிற்கு முக்கிய இடம் உண்டு.மனதை கவரும் தாமரை பூ மருத்துவ குணம் நிறைந்தவையாகும்.தாமரை பூவை போல் அதன் வேரும் அதிக மருத்துவ குணம் கொண்டவை என்று சொல்லப்படுகிறது.

தாமரை வேரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள்:

பொட்டாசியம்,மாங்கனீசு,இரும்பு,தாமிரம்,பாஸ்பரஸ்,வைட்டமின் சி,பி6 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

தாமரைத் தண்டின் வேர் தடித்து நீண்டு இருக்கும்.இதை சமைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.இந்த வேரை வட்ட வடிவில் நறுக்கி சமையல் செய்து சாப்பிடலாம்.அதேபோல் உலர்த்தி பொடியாக்கி மருந்தாகவும் உட்கொள்ளலாம்.

தாமரை வேரில் இருக்கின்ற நார்ச்சத்துக்கள் செரிமானத்தை சுலபமாக்குகிறது.இதன் காரணமாக நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கிவிடும்.

தாமரை வேரில் இருக்கின்ற பைரிடாக்சின் இரத்த அழுத்தம்,இதயப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.உடலில் படிந்த கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் தாமரைத் வேரில் கசாயம் செய்து குடித்து வரலாம்.தாமரை வேரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

தாமரை வேர் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சில் தேங்கிய சளி அனைத்தும் கரைந்து வெளியேறும்.சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் தாமரை வேரை மருந்தாக எடுத்து வரலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தாமரை வேரில் செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம்.தாமரை வேரில் இருக்கின்ற வைட்டமின் ஏ பார்வைத் திறனை அதிகரிக்க உதவுகிறது.கிட்டப்பார்வை,தூரப் பார்வை குறைபாடு இருப்பவர்கள் தாமரை வேர் பொடியை உட்கொள்ளலாம்.

Previous articleஎப்பேர்ப்பட்ட கண் பிரச்சனையும் இந்த இரண்டே பொருள் மூலம் சரி படுத்தலாம்!! இனி கண்ணாடியே போட தேவையில்லை!!
Next articleநம்புங்க.. ஜஸ்ட் ஒரு ஸ்பூன் சீரகம் இருந்தால் இந்த 5 வித நோய்களை விரட்டி விடலாம்!!