பேன் தொல்லையை சந்திக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.ஒட்டுண்ணி வகையான பேன் தலையில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழக் கூடியவை.பேன் பாதித்த ஒருவர் பயன்படுத்திய டவல்,சீப் போன்ற எதன் வழியாகவும் எளிதில் பரவக் கூடும்.
தலையில் இரத்தத்தை உறிஞ்சும் பெண்களால் அரிப்பு உண்டாகி முடிகளில் வேர் பகுதி கடுமையாக சேதமடைகிறது.இதனால் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாகும்.
பேன் தொல்லையில் இருந்து விடுபட வழிகள்:
1)பூண்டு பற்கள்
2)எலுமிச்சை சாறு
ஐந்து பூண்டு பற்களை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து விடவும்.
இதை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி தலை முழுவதும் ஒத்தி எடுக்கவும்.15 நிமிடங்களுக்கு ஒத்தி எடுத்தால் பேன்கள் மயக்க நிலைக்கு சென்றுவிடும்.பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும்.இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்தால் பேன் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
1)வேப்பிலை
2)எலுமிச்சை சாறு
ஒரு கைப்பிடி வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்தெடுக்கவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து கலந்து விடவும்.
இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்யவும்.இப்படி செய்தால் தலையில் ஒரு பேன் கூட தங்காது.
1)தேங்காய் எண்ணெய்
2)கற்பூரம்
50 மில்லி தேங்காய் எண்ணையை ஒரு கடாயில் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு கற்பூரத்தை தூளாக்கி போடவும்.இதை 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை நன்கு ஆறவிட்டு தலைக்கு தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி தலையை அலசவும்.இப்படி செய்து வந்தால் பேன் பிரச்சனை சரியாகும்.