பொதுமக்களுக்கு அடுத்தடுத்து ஷாக்.. உயரப்போகும் பேருந்து கட்டணம்!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!!

0
170
A shock to the public.. The bus fare will rise!! Information released by the central government!!
A shock to the public.. The bus fare will rise!! Information released by the central government!!

 

 

Central Gov: சுங்க கட்டணம் உயத்தியதை ரத்து செய்யுமாறு ஆம்னி பேருந்து தலைவர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருக்கும் சுங்கச் சாவடிகளில் நேற்று முதல் அதாவது செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயரத்தப்படுவதாக மத்திய அரசு ஒரு புறமும் ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சேவையை பயன்படுத்துவதற்கு சுங்கச் சாவடிகள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இந்த கட்டணம் வருடத்திற்கு இரண்டு முறை உயர்த்தப்படும். அதாவது ஏப்ரல் மாதம் 1ம் தேதியும் செப்டம்பர் மாதம் 1ம் தேதியும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும்.

சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் பிறந்த நிலையில் 1ம் தேதியான நேற்று(செப்டம்பர்1) சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளுக்கு இரண்டு தவணைகளாக கட்டணம் உயரத்தப்படும். அந்த வகையில் நேற்று(செப்டம்பர்1) மதுரை, ஓமலூர், உளுந்தூர்பேட்டை உள்பட 25 சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(செப்டம்பர் 1) சுங்கச்சாவடி கட்டணம் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்கச்சாவடிக்கு 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை அதிகமாக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வானது நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் மாற்றம் ஏற்படும். அதாவது அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதனால் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இதையடுத்து சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் “நேற்று(செப்டம்பர்1) தமிழ்நாட்டில் மீண்டும் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறை 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த 25 சுங்கச்சாவடிகளிலும் சுமார் 5 முதல் 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஜூன்மாதம் ஏற்கனவே 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இவ்வாறு சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் என்றால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும். எனவே சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் டோல்கேட்டுகளை அகற்ற வேண்டும். மத்திய அரசு இதற்காக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு ஒரு பக்கம் ஷாக் கொடுக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு மற்றொரு ஷாக் கொடுத்துள்ளது. அதாவது ஆம்னி பேருந்துகளில் பயணிக்க நாம் எடுக்கும் டிக்கெட்டின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் கட்டணம் உயர்வானது பயணம் செய்யும் தூரத்திற்கு ஏற்ப உயர்த்தப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.