ஆக்சிஜனை உள் இழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றும் பணியை நமது நாசி செய்கிறது.காற்றை சுவாசிக்க மற்றும் வாசனைகளை அறிய மட்டும் மூக்கு படைக்கப்படவில்லை.குளிர்ந்த மற்றும் சூடான காற்றை உடலுக்கு ஏற்ற வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டிய முக்கிய பணியை மூக்கு செய்கிறது.
மூக்கு மிகவும் மென்மையான உறுப்பாகும்.சிலருக்கு மூக்கில் இருந்து இரத்தம் வழிவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.ஒவ்வாமை,ஜலதோஷம்,வறண்ட மற்றும் வெப்ப காற்று சுவாசித்தல்,மூக்கில் சதை வளர்ச்சி உண்டதால் போன்ற காரணங்களால் சில்லுமூக்கு உடைந்து இரத்தம் வடிகிறது.இந்த பிரச்சனையை பலரும் அனுபவித்து இருப்பீர்கள்.
வறண்ட மற்றும் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் போது மூக்கிற்கு இருக்கின்ற இரத்த நாளங்கள் உடைந்து இரத்தம் வெளியேறுகிறது.சிலருக்கு விளையாடும் போது மூக்கில் அடிபடுவதால் இரத்தம் வெளியேறும்.ஒரு சிலருக்கு மூக்கில் கேன்சர் பாதிப்பு உண்டால் இரத்தம் வடியும்.உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மூக்கில் இரத்தம் வடியும்.
மூக்கில் இரத்தம் வழியும் போது மயக்கம்,தலைவலி,மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
மூக்கில் இரத்தம் வடியும் போது செய்ய வேண்டியவை:
மூக்கில் இரத்தம் வடியும் போது தலையை நிமிர்த்தி உட்கார வேண்டும்.பிறகு ஆட்காட்டி விரலை மூக்கை மீது வைத்து அழுத்தி பிடிக்க வேண்டும்.இதனால் மூக்கில் இருந்து இரத்தம் வடிவது நிற்கும்.
உடல் உஷ்ணம் இருப்பவர்கள் குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்ள வேண்டும்.தலைக்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் வைத்து குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.மூக்கில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.