கர்ப்பத்தை தடுக்க பிறப்பு கட்டுப்பாடு அதாவது கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இது சட்டப்படி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும் இதர மருந்துகளை போலவே பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளாலும் பக்கவிளைவுகள் உண்டாக்க கூடும்.
இந்த பக்கவிளைவுகளை அனைவரும் சந்திப்பதில்லை.கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அது 2 அல்லது 3 மாதங்கள் வரை நீடிக்கும்.பிறகு தானாக சரியாகிவிடும்.ஒருவேளை கடுமையான தொந்தரவுகள் இருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும்.
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
1)குமட்டல்
2)வாந்தி
3)உடல் எடை அதிகரிப்பு
4)மன அழுத்தம்
5)மார்பகத்தில் புண் உண்டாதல்
6)சீரற்ற மாதவிடாய்
7)மார்பக வலி
8)இரத்த அழுத்தம்
9)தூக்கமின்மை
10)இரத்த உறைவு
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையால் ஏற்படும் பிரச்சனைகள்:
இந்த மாத்திரையில் ஈஸ்டிரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் ஹார்மோன்கள் அதிகம் உள்ளது.பெண்கள் இந்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மார்பகத்தின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படக் கூடும்.சிலர் மார்பு பகுதியில் புண்கள் மற்றும் வலியை அனுபவிக்க கூடும்.
கருத்தடை மாத்திரைகளில் இரண்டு வகை உள்ளது.ஒன்று ஈஸ்டிரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் கொண்டது.மற்றொன்று புரோஜெஸ்டின் ஹார்மோன் மட்டும் கொண்டது.அதிக ஈஸ்டிரோஜன் மற்றும் ரோஜெஸ்டின் ஹார்மோன் உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை பாதுகாப்பானவை என்றாலும் அதை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் நலப் பிரச்சனையில் அபாயத்தை ஏற்படுத்திவிடும்.எனவே பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.