மூலத்தை வேரோடு அகற்றும் பவர்புல் வீட்டு வைத்தியம்!! ஒருமுறை செய்தால் ஆயுசுக்கும் தொந்தரவு இருக்காது!!

Photo of author

By Rupa

ஆசனவாய் பகுதியில் இரத்தக்கட்டிகள் உருவாகி குத வாயிலை அடைத்து கொண்டால் மலக் கழிவுகள் வெளியேற முடியாமல் போய்விடும்.இதை தான் மூலம்(பைல்ஸ்) என்று கூறுகிறார்கள்.நாள்பட்ட மலச்சிக்கலால் மூல நோயாக உருவெடுத்து ஆசனவாய் பகுதியில் அரிப்பு,எரிச்சல்,வலி மற்றும் இரத்தப்போக்கை உண்டாக்குகிறது.

மூல நோய் உண்டாக காரணங்கள்:

1)மலத்தை அடிக்கடி வைக்கும் பழக்கம்
2)நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்தல்
3)உடல் பருமன்
4)காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிடுதல்
5)நீர்ச்சத்து குறைபாடு
6)நார்ச்சத்து குறைபாடு
7)எண்ணெய் உணவுகள்

மூல நோயை குணமாக்கும் வீட்டுப் பொருட்கள்:

1.தினமும் காலை நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் குடலில் தேங்கிய மலக் கழிவுகள் சுலபமாக வெளியேறும்.

2.ஆசனவாய் பகுதியில் அதிக எரிச்சலை உணர்ந்தால் ஐஸ்கட்டிகளை அவ்விடத்தில் வைத்து மசாஜ் செய்யலாம்.இதன் மூலம் ஆசனவாய் எரிச்சல் நீங்கும்.

3.கற்றாழை ஒரு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.கற்றாழை மடலில் உள்ள ஜெல்லை நீரில் போட்டு அலசி பிரிட்ஜில் வைத்து 2 மணி நேரத்திற்கு குளிர்விக்கவும்.பிறகு இதை ஆசனவாய் பகுதியில் தடவினால் வலி,எரிச்சல் மற்றும் புண்கள் ஆறும்.

4.சுத்தமான தேங்காய் எண்ணையை மூலக்கடிகள் மீது தடவி வந்தால் சில நாட்களில் பலன் கிடைக்கும்.

5.ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதில் 4 பல் வெள்ளை பூண்டை நறுக்கி சேர்க்கவும்.இந்த நீரை இரண்டு நிமிடங்களுக்கு சூடுபடுத்தி ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

பிறகு இதை பிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும்.இந்த நீரை காட்டன் துணியில் ஊற்றி ஆசனவாய் பகுதியில் லேசாக வைத்து ஒற்றி எடுக்கவும்.இப்படி செய்து வந்தால ஆசனவாய் அரிப்பு,வலி நீங்கும்.

6.நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்கள்,காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிட்டு வந்தால் மூல நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.