ஒரே நாளில் நெஞ்சு சளியை பனி போல் உருக்கி வெளியேற்றும் “நேச்சுரல் வேப்பர் ரப்”!! இதை எப்படி தயார் செய்வது?

0
181
"Natural Vapor Rub" that melts chest mucus like snow in one day!! How to prepare this?
"Natural Vapor Rub" that melts chest mucus like snow in one day!! How to prepare this?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி,இருமல் பாதிப்பால் கஷ்டப்படுகின்றனர்.காலநிலை மாற்றம்,மழைக்காலங்களில் ஏற்படும் சளி பாதிப்பு குணமாக குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகிறது.ஆனால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வேப்பர் ரப்பை பயன்படுத்தினால் சில தினங்களில் தீர்வு கிடைத்துவிடும்.

நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை கரைக்கும் வேப்பர் ரப் தயார் செய்வது எப்படி?

1)நெய்
2)பச்சை கற்பூரம்

சுத்தமான ஈரமில்லாத பாத்திரத்தத்தில் ஐந்து ஸ்பூன் பசு மாட்டு நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.குறைவான தீயில் வைத்துவிடவும்.இல்லையென்றால் நெய் கருகிவிடும்.

பிறகு இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை இடித்து தூளாக்கி நெயில் சேர்க்கவும்.இதை கைவிடாமல் இரண்டு நிமிடங்களுக்கு காய்ச்சவும்.பிறகு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி நன்கு ஆறவிடவும்.

நெய் மற்றும் பச்சை கற்பூர கலவை கெட்டியாகி இருக்கும்.இதை ஒரு சுத்தமான டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இந்த வேப்பரப்பை மூக்கு மற்றும் நெஞ்சின் மீது அப்ளை செய்தால் கெட்டியான சளி பனி போல் உருகி வந்துவிடும்.ஒருமுறை தயாரிக்கப்பட்ட இந்த நேச்சுரல் வேப்பர் ரப்பை மூன்று தினங்களுக்கு மட்டுமே வைத்து பயன்படுத்த வேண்டும்.பிறகு மீண்டும் புதிதாக செய்து பயன்படுத்த வேண்டும்.

1)யூக்கலிப்டஸ் எண்ணெய்
2)இலவங்க எண்ணெய்
3)தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்,மூன்று சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய்,இரண்டு சொட்டுகள் இலவங்க எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.இதை மூக்கு மற்றும் நெஞ்சு பகுதியில் தடவினால் கெட்டி சளி அனைத்தும் கரைந்து வெளியேறும்.