கேஸ்ட்ரபல் எனப்படும் வாயுத் தொல்லை பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை இருந்தால் நமக்கு சரியாக ஏப்பம் வராது. மேலும் முதுகுப் பகுதியில் ஒரு விதமான வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த வாயுத் தொல்லையை குணப்படுத்த தற்போது பல வகையான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வந்துவிட்டது.
இருப்பினும் இயற்கையான சிகிச்சையை விட எந்த மருந்தும் வாயுத் தொல்லைக்கு சிறப்பான மருந்தாக அமையாது. எனவே வாயுத் தொல்லையை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு
* நெய்
* சாதம்
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த வாணலியில் சேர்த்து வதக்க வேண்டும்.
பூண்டு நன்றாக வதங்கிய பின்னர் இதில் சாதம் சேர்த்து வதக்க வேண்டும். 5 நிமிடம் நன்றாக சாதத்தை வதக்கி இறக்க வேண்டும். பின்னர் இதை தட்டில் போட்டு. சாப்பிடலாம். இதை செய்தால் கேஸ்ட்ரபல் பிரச்சனை சரியாகும்.