தற்போதைய காலத்தில் அனைவரும் இரவில் சரியான நேரத்திற்கு தூங்குவது கிடையாது. இரவு நேரத்தில் அதிக நேரம் கண் விழித்து செல்போன், லேப்டாப் போன்ற திரைகளுக்கு முன்னால் நாம் அமர்ந்து கொண்டு அதை பயன்படுத்தி வருகின்றோம்.
இதனால் நமக்கு தூக்கம் தடை படுகின்றது. தூக்கம் தடைபட்டு இரவு நேரத்தில் சரியான நேரத்திற்கு தூக்கம் வரவில்லை என்றால் அது நமக்கு பெரும் பிரச்சனையை கொண்டு வரும். எனவே இந்த தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* அத்திக்காய்
* நெய்
செய்முறை:
கடைகளில் அத்திக்காய் கிடைக்கும். அதை வாங்கி வந்து அல்லது மரங்களில் இருக்கும் அத்திக்காயை பறித்து வந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த வாணலியில் நெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நெய்யில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள அத்திக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நெய்யில் அத்திக்காய் நன்கு வதங்கிய பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு இதை இறக்கி விட வேண்டும். பின்னர் இந்த நெய்யில் வதக்கிய அத்திக்காயை சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் சரியான நேரத்திற்கு தூக்கம் வரும்.