நம்மில் சிலருக்கு அதிகமாக உடல் சூடு இருப்பதால் அடிக்கடி வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண் ஏற்படும் பொழுது நம்மால் சரியாக சாப்பிட முடியாது. மேலும் வாய் எரிச்சலாக இருக்கும். வாய்ப்புண் இருந்தால் நமக்கு அல்சர் இருக்கும் வாய்ப்பும் அதிகம்.
வாய்ப்புண் இருந்தால் அதை குணப்படுத்த பலரும் கீரை சாப்பிடுவார்கள். கீரை சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இருப்பினும் கீரை சாப்பிட்ட பின்னரும் வாய்ப்புண் குணமாகவில்லை என்றால் நாம் கசகசாவை பயன்படுத்தலாம். இந்த பதிவில் வாய்ப்புண்ணுக்கு கசகசாவை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* கசகசா
* பசும்பால்
செய்முறை:
முதலில் கசகசாவை அரைத்து பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பசும்பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பால் நன்றாக கொதித்த பின்னர் இதை இறக்கி விட வேண்டும். பின்னர் இதை ஒரு டம்ளரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் நாம் அரைத்து வைத்துள்ள கசகசா பொடியை இதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமடையும்.