உயிரே போகும் பல் வலியை குணப்படுத்த வேண்டுமா? அப்போ இந்த பல்பொடி மட்டும் போதும்! 

0
195
Want to cure a life-threatening toothache? Then only this powder is enough!
Want to cure a life-threatening toothache? Then only this powder is enough!

நாம் நம்முடைய வாயை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருக்கும் பொழுது நம்முடைய வாயில் இருக்கும் கிருமிகள் நம்முடைய பற்ஙளை அரித்து சொத்தை பற்களாக மாற்றுகின்றது. பின்னர் சொத்தை பற்கள் இருப்பதால் நமக்கு பல் வலி ஏற்படுகின்றது.

பல் வலி ஏற்படும் பொழுது நமக்கு தாங்க முடியாத வலி இருக்கும். என்ன செய்தாலும் பல் வலி குணமாகாது. எனவே பல் வலி இருப்பதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

* புளியங்கொட்டை தோல்

* கருவேலம் பட்டை

* உப்பு

செய்முறை:

புளியங்கொட்டையின் தோலையும் கருவேலம் பட்டையையும் தனித்தனியாக வெயிலில் உலரத்திக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங்கொட்டை தோலையும் கருவேலம் பட்டையையும் தனித்தனியாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு புளியங்கொட்டை தோல் மற்றும் கருவேலம் பட்டை கிடைக்கவில்லை என்றால் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொடியை வாங்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம்பட்டை பொடி இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பொடியை காற்று புகாத பாட்டில் ஒன்றில் அடைத்து வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம். இந்த பொடியை கொண்டு நாம் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும். மேலும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். மேலும் பல் வலி ஏற்படுவதை தடுக்கலாம்.

Previous articleநடக்கும் போது கால் பிரண்டு சுளுக்கி விட்டதா.. இதோ இதை மட்டும் தடவுங்கள்!!
Next articleபுதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் கவனத்திற்கு!! மாதம் ரூ 1000 வழங்குவது குறித்து புதிய அறிவிப்பு!!