நாம் தற்போதைய காலத்தில் பசிக்காக சாப்பிடாமல் ருசிக்காக சாப்பிட்டு வருகிறோம். அவ்வாறு ருசிக்காக சாப்பிடும் உணவுகள் நமக்கு சில நேரங்களில் நமக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. அதாவது வயிற்று வலி, வயிற்று எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது. மேலும் சில சமயங்களில் வயிற்று போக்கையும் ஏற்படுத்துகினறது. இந்த வயிற்று போக்கையும் வயிற்று வலியையும் குணப்படுத்த உதவும் எளிமையான சிகிச்சை முறை குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* இஞ்சி
* உப்பு
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் உறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த இஞ்சித் துண்டை தட்டி அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இஞ்சி சாற்றில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டு நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அப்படியே குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்று போக்கு உடனே நிற்கும். மேலும் வயிறு வலி குணமடையும்.