காலநிலை மாற்றத்தால் இருமல்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.சாதாரண வைரஸ் கிருமிகளால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட கை வைத்தியத்தை முயற்சி செய்யவும்.
குறிப்பு 01:
1)மஞ்சள் தூள்
2)மிளகு
3)பால்
ஒரு கிளாஸ் சூடான பாலில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 4 மிளகை தூள் செய்து கலந்து குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
குறிப்பு 02:
1)முட்டை
2)மிளகுத் தூள்
3)சீர்கத் தூள்
4)மஞ்சள் தூள்
5)உப்பு
அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும்.அடுத்து சிறிதளவு மிளகுத் தூள்,சீர்கத் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.இதை இருபுறமும் வேகவைத்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
குறிப்பு 03:
1)பூண்டு
2)பால்
3)மஞ்சள் தூள்
4)தேன்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு பல் இடித்த பூண்டு,சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் தொண்டை வலி,தொண்டை கரகரப்பு உள்ளிட்டவை ஒரே நாளில் சரியாகும்.
குறிப்பு 04:
1)சுக்கு
2)மிளகு
3)திப்பிலி
4)கொத்தமல்லி
5)அதிமதுரம்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சம அளவு எடுத்து வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து அரைத்து வைத்துள்ள பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து காய்ச்சி குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.