நியாயவிலை கடைகள் மற்றும் வணிக கடைகளில் கிடைக்க கூடிய பாமாயிலை பெருமபாலானோர் உபயோகித்து வருகின்றனர்.இந்த பாமாயிலை குறிப்பிட்ட அளவு உபயோகிக்கும் போது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.ஆனால் இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகப்படியான கொழுப்புச்சத்து நிறைந்த பாமாயில் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து இதய நோய்களை உருவாக்கிவிடும்.உங்கள் குடும்பத்தில் இதய நோயாளிகள் இருந்தால் பாமாயில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
உடல் பருமனால் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் பாமாயில் உணவுகளை தவிர்க்க வேண்டும்.பாமாயிலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் உடல் எடையை கூடிவிடும் அபாயம் கொண்டிருக்கிறது.அது மட்டுமின்றி பாமாயில் உணவுகள் வளர்ச்சிதை நோய்களையும் உண்டு பண்ணிவிடும்.
ஏற்கனவே பயன்படுத்திய பாமாயிலில் சமைத்த உணவுகளை சாப்பிடும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும்.அதேபோல் பாமாயிலில் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்,ஐஸ்கிரீம்,சாக்லேட்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.இதனால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கக் கூடும்.
பாமாயில் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடலில் பித்தம்’
அதிகரித்துவிடும்.சிலருக்கு வாந்தி,தலைசுற்றல்,மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பாமாயிலை தவிர்க்க முடியாது என்றாலும் அதை முறையாக சுத்தப்படுத்திய பிறகு பயன்படுத்தலாம்.
ஒரு கடாயில் பாமாயிலை ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 6 பல் பூண்டை தட்டி சேர்க்கவும்.இந்த எண்ணெயை கொதித்து வந்த பின்னர் ஆறவைத்து வடிகட்டி பயன்படுத்தலாம்.
அதேபோல் புளி நெல்லிக்காய் அளவு மற்றும் கல் உப்பு சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். இந்த புளியில் கல் உப்பை வைத்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்.பிறகு பாமாயிலை கடாயில் ஊற்றி புளியை போட்டு கொதிக்க வைக்கவும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு வடிகட்டிய பிறகு சமையலுக்கு பயன்படுத்தலாம்.
அதேபோல் பாமாயிலில் ஒரு துண்டு இஞ்சியை போட்டு கொதிக்க வைத்தால் பித்தம் முறிந்துவிடும்.இதை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாது.ஆனால் இதய நோயாளிகள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் பாமாயில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.