உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பருப்பு வகைகளில் ஒன்று முந்திரி.இதில் கால்சியம்,மெக்னீசியம்,ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.உடல் எடை இழப்பு,எலும்பு வலிமை,செரிமான மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது.
முந்திரியில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கின்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
வேர்க்கடலை போன்றே முந்திரி பருப்பும் சுவை மிகுந்தவையாகும்.இதில் இருந்து வரும் நறுமணம் அனைவரையும் தன் வசம் ஈர்க்கும்.முந்திரி பருப்பு பிடிக்காது என்று சொல்பவர்கள் மிகவும் குறைவு.இனிப்புகள் செய்ய முந்திரி பருப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் சந்தையில் விற்கப்படும் முந்திரிகளில் பெரும்பாலானவை போலி என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கிறது.
ஒரிஜினல் முந்திரிக்கும் போலி முந்திரிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.ஒரிஜினல் முந்திரி வெள்ளையாக தடித்து இருக்கும்.ஆனால் போலி முந்திரி சற்று மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
முந்திரி மீது கரும் புள்ளிகள் இருந்தால் அது தரமற்றவை என்று அர்த்தம்.இதுபோன்ற முந்திரிகளின் உள்ளே புழு,பூச்சிகள் மற்றும் சொத்தை இருக்க வாய்ப்பிருக்கிறது.தரமான முந்திரி பருப்பு சற்று நீளமாக இருக்கும்.ஆனால் தரமற்ற முந்திரி பருப்பின் நீளம் சற்று குறைவாக காணப்படும்.
முந்திரியில் இருந்து அதிகமாக வாசம் வந்தால் அது தரமானது.இதை சாப்பிடும் போது பற்களில் ஒட்டாமல் இருக்கும்.ஆனால் தரமற்ற முந்திரி பருப்பை சாப்பிட்டால் பற்களில் பசைபோல் ஒட்டிக் கொள்ளும்.