இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் அபூர்வ பூ!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா!!

Photo of author

By Rupa

சாலைகள் மற்றும் வீடுகளில் அழகிற்காக வளர்க்கப்படும் பூக்களில் ஒன்றான நித்திய கல்யாணியில் நம்ப முடியாத மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது.சர்க்கரை,சரும அலர்ஜி,புற்றுநோய்,பக்க வாதம்,இரத்த அழுத்தம்,நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு இந்த பூ மருந்தாக திகழ்கிறது.

நித்திய கல்யாணி

இந்த செடியின் பூ கசப்பு சுவை நிறைந்தவை.இவை காசநோய்,நீரழிவு,கபம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தீர்வளிக்கிறது.நித்திய கல்யாணி பூக்களை வெயிலில் நன்கு காய வைத்து பொடியாக்கி ஒரு கன்டைனரில் சேமித்துக் கொள்ளவும்.

பிறகு இந்த பொடியை பயன்படுத்தி டீ செய்து குடித்து வந்தால் உடலிலுள்ள பல நோய்கள் கட்டுப்படும்.இந்த பூவின் பொடியில் சிறிது தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.சர்க்கரை நோயாளிகள் தேன் மற்றும் இனிப்பு சுவைகள் சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.இல்லையென்றால் இப்பூக்களை பச்சையாக சாப்பிடலாம்.

நித்திய கல்யாணி பூக்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாசம் தொடர்பான பாதிப்புகள் அகலும்.இப்பூவில் இருக்கின்ற வேதிப்பொருட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தினமும் நித்திய கல்யாணி தேநீர் பருகினால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.நுரையீரல் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் நித்திய கல்யாணி பூவை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.சர்க்கரை நோயாளிகள் நித்தியகல்யாணி இலையை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

நித்திய கல்யாணி தேநீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1)நித்திய கல்யாணி மலர்
2)தேன்

செய்முறை:

நித்திய கல்யாணி பூவை நன்கு காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நித்திய கல்யாணி பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும்.