தற்பொழுது பலரும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உருவாகி மலம் கழிப்பதில் கடுமையான சிரமத்தை உண்டாக்குகிறது.
நீண்ட நாட்களாக மலம் கழிக்காமல் இருந்தால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வாயுத் தொல்லை,பைல்ஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பத்தில் கவனிக்க தவறிவிட்டால் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும்.எனவே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட கருப்பு எள்ளை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
1)கருப்பு எள்
2)வெல்லம்
செய்முறை:
100 கிராம் அளவிற்கு கருப்பு எள் வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து எள்ளை கொட்டி மிதமான தீயில் வறுக்கவும்.
எள் பொரியும் சத்தம் கேட்டதும் அடுப்பை அணைத்துவிடவும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமிக்கவும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் தேவையான அள்வு எள்ளு பொடி மற்றும் வெல்லத் தூள் கலந்து சாப்பிடவும்.இதை காலையில் உணவு உட்கொள்வதற்கு முன்னர் சாப்பிட வேண்டும்.இதனால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் வெளியேறி மலக் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
தேவையான பொருட்கள்:
1)கருப்பு எள்
2)விளக்கெண்ணெய்
3)தண்ணீர்
செய்முறை:
பாத்திரம் ஒன்றில் கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடித்தால் மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.