மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

0
130

 

 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுதி வரும் நிலையில் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் குறித்த அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்வியாண்டில் தொடக்கத்திலேயே வெளியிட்டது.

இந்த அட்டவணியை அடிப்படையில் வழக்கமாக 210 நாட்கள் தான் வேலை நாட்களாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்கள் கூடுதலாக 220 நாட்கள் வேலை நாட்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடும் எதிர்ப்புக்கு பிறகு வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டு மீண்டும் புதிய அட்டவணை வெளியானது.
இதையடுத்து அட்டவணையின் அடிப்படையில் காலாண்டு தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. தற்பொழுது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகள் அனைவரும் காலாண்டு தேர்வை எழுதி வருகின்றனர்.

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 19ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. அதே போல 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 20ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. தற்பொழுது நடைபெற்று வரும் காலாண்டு தேர்வு வரும் வெள்ளிக் கிழமைகளில் அதாவது செப்டம்பர் 27ம் தேதிக்குள் முடியும் வகையில் காலாண்டு தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகங்களும் செப்டம்பர் 27ம் தேதிக்குள் காலாண்டு தேர்வை எழுதி முடிக்கும் முயற்சியில் உள்ளது.

காலாண்டு தேர்வு முடிந்தவுடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வரும் செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை முதல் அக்டோபர் 2ம் தேதி புதன் கிழமை வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கவும் அக்டோபர் 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கவும் திட்டமிடப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியதை அடுத்து மாணவர்கள் மத்தியிலும் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் “காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிப்பு குறித்து அரசுடன் ஆலோசனை செய்து வருகிறோம். எனவே இன்று(செப்டம்பர்25) காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.