பைசா செலவின்றி மலச்சிக்கலுக்கு தீர்வு வேண்டுமா? இதை உடனே செய்யுங்கள்!!

0
428
Want a solution to constipation without spending a dime? Do this now!!
Want a solution to constipation without spending a dime? Do this now!!

மலசிக்கல் பிரச்சனை ஒரு தீவிர பாதிப்பாக கருதப்படுகிறது.இன்று பலரும் மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.முக்கினால் மட்டுமே மலம் வெளியேறுகிறது என்று பலரும் புலம்பி வருகின்றனர்.சிலர் நான்கு நாட்கள் ஆனாலும் மலம் கழிக்காமல் இருப்பவர்கள்.இதற்கு எல்லாம் காரணம் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம்.

எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.ஆனால் இன்று நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் நார்ச்சத்து குறைவாக காணப்படுகிறது.

மைதா,கொழுப்பு உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் செரிமான மண்டலம் பாதிக்கப்படுகிறது.இதனால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை வந்துவிட்டால் அதை ஆரம்ப நிலையில் குணப்படுத்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை தொடர்ந்தால் அது நாளடைவில் மூல நோயாக மாறிவிடும்.மலக் கழிவுகள் குடலில் தேங்கி இருந்தால் அது குடல் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.எனவே தாமதிக்காமல் உரிய நேரத்தில் மலக் கழிவுகளை வெளியேற்றிவிட வேண்டும்.

மலச்சிக்கலை போக்கும் அருமருந்து

நம் முன்னோர் காலத்தில் இருந்து மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக விளக்கெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் கலந்து குடிக்க வேண்டும்.இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பெருங்குடலில் தேங்கிய கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை செய்யலாம்.குழந்தைகளுக்கு குறைவான அளவில் விளக்கெண்ணெய் நீர் கொடுக்க வேண்டும்.

மேலும் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் விளக்கெண்ணெயை வயற்றுபகுதியில் தடவி மசாஜ் செய்யலாம்.இதனால் குடலில் இறுகிய மலம் இளகி வெளியேறும்.

Previous articleதிருச்செந்தூரில் முருகனை வழிபட 1000 ரூபாய் கட்டணம்! அதிர்ச்சியில் பக்தர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 
Next articleமருத்துவரின் எச்சரிக்கை.. இந்த வகை மாத்திரைகள் சாப்பிட்டால் கிட்னி பெயிலியர் உறுதி!!