பெரும்பாலானோர் சளி இருமல் பாதிப்பில் இருந்து மீள கை வைத்தியத்தை பின்பற்றுகின்றனர்.சிலர் மூலிகை கசாயம்,மூலிகை பானம் செய்து குடிப்பார்கள்.அந்தவகையில் சளி இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.இது கொங்கு பகுதியில் பிரபலமான ஒன்றாகும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)சின்ன வெங்காயம் – 5 முதல் 8
2)வர குண்டு மிளகாய் – 3
3)வெள்ளை பூண்டு பற்கள் – 10
4)பழுத்த தக்காளி – 2
5)சீரகம் மற்றும் மிளகு – ஒரு தேக்கரண்டி
6)வர கொத்தமல்லி – 1/2 தேக்கரண்டி
7)கறிவேப்பிலை – 2 கொத்து
8)கொத்த மல்லி தழை – சிறிதளவு
9)கடுகு – 1/2 தேக்கரண்டி
10)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
11)உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சின்ன வெங்காயம்,பூண்டு பற்கள்,கறிவேப்பிலை,சீரகம் மிளகு மற்றும் வர கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.
பிறகு இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.பிறகு அதில் கடுகு போட்டு பொரிய விடவும்.அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலையை போடவும்.பிறகு இரண்டு பழுத்த தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும்.
பிறகு ஐந்து சீனா வெங்காயத்தை பொடியாக நறுக்கி தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.தக்காளி வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அதன் பிறகு அரைத்த மசாலா கலவையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.பிறகு வாசனைக்காக சிறிது மல்லித்தழை தூவி இறக்கவும்.அவ்வளவு தான் சளி இருமலை போக்கும் செலவு ரசம் தயார்.எத்தை ஒரு கப்பில் ஊற்றி இளஞ்சூட்டில் குடித்தால் நெஞ்சு சளி கரைந்துவிடும்.