உங்களில் பலர் சாதம் மீதமானமானால் வெளியில் கொட்டி விடுவீர்கள்.ஆனால் இந்த சாதத்தை வைத்து சுவையான பல டிஷ்ஸஸ் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாது.அந்தவகையில் மீதமான சாதத்தில் சுவையான மொரு மொரு பணியாரம் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
*மீதமான சாதம் – 2 கப்
*ரவை – 1 கப்
*அரிசி மாவு – 2 தேக்கரண்டி
*வெங்காயம் – 2
*எண்ணெய் – தேவையான அளவு
*கேரட் – 2
*கொத்தமல்லி தழை – சிறிதளவு
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து மீதமான சாதத்தை கொட்டி 1/2 கப் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பிறகு இரண்டு கேரட்,இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு கப் ரவையை அரைத்த மாவில் சேர்த்து கட்டி படாமல் கலந்து விடவும்.பின்னர் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கேரட்,கொத்தமல்லி தழை சேர்த்து ஒருமுறை கலந்துவிடவும்.இறுதியாக தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.இதை 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
இவ்வாறு செய்தால் பணியார மாவு தயாராகிவிடும்.பிறகு அடுப்பில் பணியாரக்கல் வைத்து சூடாக்கவும்.அதன் பின்னர் பணியாரக்குழியில் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு குழியாக ஊற்றவும்.அடிப்பாகம் வெந்து வந்ததும் திருப்பி போட்டு வேகவிடவும்.தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
பணியாரம் இருபுறமும் சிவந்து வந்ததும் அடுப்பை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இவ்வாறு மீதமுள்ள மாவில் பணியாரம் சுட்டெடுக்கவும்.இந்த பணியாரத்திற்கு தேங்காய் சட்னி,தக்காளி சட்னி அட்டகாசமான காமினேஷனாக இருக்கும்.