நீண்ட நாள் அல்சர் பிரச்சனைக்கு ஓவர் நைட்டில் தீர்வு!! தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள் போதும்!!

 

இன்று நடுத்தர வயதினர் முதல் பெரியவர்கள் வரை அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சிறுகுடலில் ஏற்படும் இந்த அல்சர் புண்களால் அடிவயிற்று வலி,உணவு உட்கொண்ட பிறகு வயிறு எரிச்சல்,மலம் கழிக்கும் போது ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படும்.

உண்ணும் உணவு ஆரோக்கியமற்றதாக இருப்பதன் விளைவாகவே இதுபோன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.அல்சர் வந்த பிறகு அதன் தீவிரத்தை உணராமல் இருந்தால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

அல்சர் அறிகுறிகள்:

*கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
*வாந்தி
*உடல் சோர்வு
*மூச்சு திணறல்
*எடை இழப்பு
*பசியின்மை
*வயிறு எரிச்சல்
*நெஞ்செரிச்சல்
*மயக்கம்

தேவையான பொருட்கள்:

1)தேங்காய்
2)கசகசா

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கசகசா சேர்த்து தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடவும்.மறுநாள் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.அதன் பிறகு ஒரு தேங்காயை உடைத்து அதல் பாதியை எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு துருவல் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும்.

இதையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.பிறகு உடைத்த தேங்காயின் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனை விரைவில் சரியாகும்.

தேவையான பொருட்கள்:

1)வெந்தயம்
2)மோர்
3)கொத்தமல்லி தழை

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவிடவும்.

அதன் பிறகு ஒரு கிளாஸில் பசும் தயிர் செய்யப்பட்ட மோரை ஊற்றிக் கொள்ளவும்.அடுத்து சிறிதளவு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி மோரில் கலந்து கொள்ளவும்.அடுத்ததாக ஊறவைத்த வெந்தயத்தை போட்டு கலக்கி குடிக்கவும்.இந்த மோரை தினமும் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.