உங்களில் பலருக்கு தயிர் என்றால் அலாதி பிரியமாக இருக்கும்.தயிரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது,தயிர் செய்யப்பட்ட பானங்களை குடிப்பது,தயிர் குழம்பு,தயிர் பச்சடி என்று பல வகைகளில் தயிர் எடுத்துக் கொள்ளப்படுகிறது.தயிரில் லாக்டிக் அமிலம் அதிகளவு நிறைந்திருக்கிறது.தயிரில் இருக்கின்ற நல்ல பாக்டீரியாக்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
தயிர் உடலுக்கு நல்லது என்றாலும் சிலவகை உணவுகளுடன் அதை சேர்த்து சாப்பிடும் போது அவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்:
1)சிட்ரஸ் பழங்கள் மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2)உங்களில் பலருக்கு தயிரில் வெங்காயத்தை நறுக்கி போட்டு பச்சடி போன்று சாப்பிடுவது பிடிக்கும்.ஆனால் இந்த பழக்கத்தை மெல்ல மெல்ல குறைத்துக் கொள்வது நல்லது.தயிர் மற்றும் வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டால் தோல் அலர்ஜி,அரிப்பு போன்ற குறைபாடுகளை ஏற்படுத்திவிடும்.
3)தயிர் சாதத்துடன் மாங்காய் ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம் போன்று இருக்கும் என்று பலரும் கூறுவர்.ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டால் தோல் அலர்ஜி உண்டாகிவிடும்.
4)தயிருடன் மீனை சேர்த்து சாப்பிடவே கூடாது.இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமானக் கோளாறு,வயிறு வலி,தோல் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
5)பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்றவை ஏற்படக் கூடும்.
6)எண்ணெய் நிறைந்த உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.உப்பு நிறைந்த தின்பண்டங்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடக் கூடாது.
7)தயிர் சாதத்திற்கு கருவாடுத் தொக்கு சிறந்த காமினேஷனாக திகழ்கிறது.ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வதால் தோல் அலர்ஜி,அரிப்பு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும்.