உலகில் பெருமபாலானோர் புற்றுநோய் பாதிப்பால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுகிறது.நம் இந்தியாவில் அதிகமானோருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைபிடித்தல் மற்றும் மாசடைந்த காற்றை சுவாசித்தல் ஆகும்.
நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்:
1)சுவாசிப்பதில் சிரமம்
2)எலும்பு வலி
3)சுவை உணர்வு இழப்பு
4)அதிகப்படியான இருமல்
5)நெஞ்சு வலி
6)இரும்பும் போது இரத்தம் வருதல்
7)திடீர் எடை இழப்பு
புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த புற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கிறது.புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்றால் அதற்கு வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.மாசடைந்த காற்றை சுவாசித்தல்,இரசாயனக் காற்றை சுவாசித்தல்,ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம்.
நுரையீரல் புற்றுநோய் பாதித்தால் முதலில் மூச்சு விடுதலில் சிரமம்,நெஞ்சு பகுதியில் வலி,தொடர் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும்.இந்நோய் தீவிரமடைந்தால் திடீர் எடை இழப்பு,நிமோனியா,இரும்பும் போது இரத்தம் வெளியேறுதல் போன்றவை ஏற்படும்.நுரையீரல் புற்றுநோய் ஆரம்ப கட்ட நிலையில் இருந்தால் லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம்.
ஆனால் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு முற்றிவிட்டால் உயிர் பிழைப்பது கடினம்.இரண்டு அல்லது மூன்றாது கட்ட நுரையீரல் புற்றுநோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிர்வாழும் நாட்களை அதிகரிக்க முடியும்.ஆனால் முழுமையாக குணப்படுத்த முடியாது.