இன்று பலர் பல்வேறு உடல் உபாதைகளால் அவதியடைந்து வருகின்றனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி,இருமல்,காய்ச்சல்,விஷக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகளுக்கு சளி,இருமல் தொந்தரவு அடிக்கடி நிகழக் கூடியவையாகும்.சளி பாதிப்பு தீவிரமானால் அது மார்பு,நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் படிந்து கெட்டியாகிவிடும்.இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.எனவே இந்த பாதிப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் போதே வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்:
1)துளசி
2)ஓமம்
3)தேன்
செய்முறை:
ஒரு தேக்கரண்டி அளவு ஓமம் எடுத்து கடாயில் போட்டு வறுக்க வேண்டும்.ஓமம் கருகிடாமல் பார்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அதன் பிறகு 10 துளசி இலைகளை கொதிக்கும் ஓம நீரில் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி கரைந்து நாசி வழியாக வெளியேறிவிடும்.
சளியை கரைக்கும் மற்றொரு மூலிகை பானம்
தேவையான பொருட்கள்:
1)ஓமவல்லி
2)வெற்றிலை
3)சுக்கு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் இரண்டு ஓமவல்லி இலையை இடித்து போடவும்.
அடுத்து ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு அதில் சேர்க்கவும்.பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு கொரகொரப்பாக அரைத்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.இதை மிதமான தீயில் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால் நெஞ்சு சளி பிரச்சனை நீங்கும்.