வெயில் காலத்தில் வியர்க்குரு ஏற்படுவது சாதாரண விஷயம் தான்.ஆனால் சிலருக்கு வியர்க்குரு பாதிப்பு தீவிரமாகி சருமத்தில் பாதிப்புகளை உண்டாக்குகிறது.வெப்பமான சூழலில் உருவாகும் பாதிப்புகளில் ஒன்று வியர்க்குரு.வெயிலில் அதிக நேரம் நடமாடுபவர்களுக்கு,உடல் சூடு பாதிப்பால் அவதியடைபவர்களுக்கு வியர்க்குரு கொப்பளம் ஏற்படுகிறது.
உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும் போது அவை வியர்க்குரு கொப்பளங்களை உண்டாக்கிவிடும்.சரும துளைகள் வழியாகத் தான் வியர்வை வெளியேறுகிறது.இந்த சருமத் துளைகள் அடைத்துக் கொள்ளும் போது சிறு சிறு கொப்பளங்கள் சிவந்த நிறத்தில் உருவாகிறது.இந்த கொப்பளங்களை தான் வியர்குரு என்றழைக்கின்றோம்.
இந்த வியர்க்குரு பாதிப்பு ஏற்படும் போது பவுடர் பயன்படுத்துவை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பவுடர் பயன்படுத்துவதால் அரிப்பு,எரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.அது மட்டுமின்றி அதிகப்படியான வியர்வை வெளியேறுவது கட்டுப்படுகிறது.வியர்க்குரு பாதிப்பு இருப்பவர்கள் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
தினமும் இருமுறை குளிப்பதால் வியர்க்குரு பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.செயற்கையாக தயாரிக்கப்பட்ட க்ரீம் மற்றும் பவுடர்களை தவிர்த்து இயற்கையான பொருட்களை பயன்படுத்தி பலன் பெறலாம்.
ஒரு காட்டன் துணியில் ஐஸ்கட்டிகளை வைத்து வியர்க்குரு கொப்பளங்கள் மீது மசாஜ் செய்து வந்தால் வியர்க்குரு கொப்பளங்கள் மறையும்.கற்றாழை ஜெல்லை வியர்க்குரு மீது தடவி குளித்து வந்தால் வியர்க்குரு கட்டுப்படும்.