குடலை சுத்தப்படுத்தும் மூன்று வகை ட்ரிங்க்ஸ்!! தினமும் குடித்தால் வாயுத் தொல்லை வயிறு உப்பசம் தொல்லை இனி இல்லை!!

0
281

 

தரமற்ற உணவுகளால் குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.குடலில் தேவையற்ற கழிவுகள் சேர்ந்தால் அது வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,வயிறு மந்தம்,குடல் அலர்ஜி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

 

குடல் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் நீங்க இந்த வீட்டு வைத்தியகங்களை தொடர்ந்து பின்பற்றவும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)ஆப்பிள்

2)இஞ்சி

3)தேன்

 

செய்முறை:

 

முதலில் ஒரு ஆப்பிளை பொடியாக நறுக்கவும்.பிறகு அதன் விதைகளை நீக்கிவிட்டு ஆப்பிள் துண்டுகளை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

 

பிறகு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.இந்த இஞ்சி சாறை வடிகட்டி ஆப்பிள் ஜூஸில் கலக்கவும்.

 

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி குடித்தால் குடல் மற்றும் வயிறு சுத்தமாகும்.வாயுத் தொல்லை,வயிறு மந்தம் உப்பசம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)எலுமிச்சை சாறு

2)தண்ணீர்

 

செய்முறை:

 

ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தில் இருந்து சாறு பிழிந்து சூடான நீரில் கலந்து குடித்தால் வயிறு சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)வெதுவெதுப்பான நீர்

2)வேப்ப எண்ணெய்

 

செய்முறை:

 

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி வேப்ப எண்ணெய் சேர்த்து குடித்தால் வயிறு கோளாறு,வாயுத் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.