உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கினால் உடல் பருமன் உண்டாகி கடுமையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.எனவே உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடு மேற்கொண்டால் உடல் எடை கூடாமல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
சிலர் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கடின உடற்பயிற்சி,ஆபத்தான டயட் முறைகளை பின்பற்றுவார்கள்.இதனால் உடல் எடை குறைந்தாலும் இந்த பழக்கம் உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறிவிடும்.
எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.சிலருக்கு உடற்பயிற்சி,ஆரோக்கியமான டயட் இருப்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கும்.அவர்களெல்லாம் இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றினால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க ஆரோக்கிய வழிகள்:
தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீர் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகள் குறையும்.
ஒரு கப் நீரில் சீரகம்,வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
ஓமம்,சீரகம்,சோம்பு சேர்த்த மூலிகை தேநீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
காபி,டீக்கு பதில் ஓம நீர்,இலவங்கப்பட்டை தேநீர்,எலுமிச்சை தேநீர் குடித்து வந்தால் உடல் எடை ஏறாமல் இருக்கும்.வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரைய க்ரீன் குடிக்கலாம்.சர்க்கரை மற்றும் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் உணவுகள்,கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.கலோரி குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.தினமும் ஒரு கிளாஸ் மூலிகை தேநீர் குடிக்க வேண்டும்.அதேபோல் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.