நெல்லிக்காயின் மறுபக்கம்.. இவர்கள் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் நிச்சயம்!!

Photo of author

By Rupa

உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடிய காய்களில் ஒன்று நெல்லி.இதில் இருக்கின்ற வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.சருமப் பிரச்சனை,தலைமுடி சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.

நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்,இரும்பு,கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.

இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.இருதய பிரச்சனை இருப்பவர்களுக்கு நெல்லிக்காய் சிறந்த மருந்தாக திகழ்கிறது.

உயர் இரத்த அழுத்தம்,உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் அருமருந்தாக செயல்படுகிறது.தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும்.இருப்பினும் நெல்லிக்காய் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

நெல்லிக்காயில் உள்ள அமிலத் தன்மை நெஞ்செரிச்சல்,வயிறு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.இரத்தம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காயை தவிர்க்க வேண்டும்.இதய நோயாளிகள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஒவ்வாமை பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காயை தவிர்க்க வேண்டும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும். தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.