ஆண்களே உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
இயற்கை வைத்தியம் 01:
1)முருங்கை பூ
2)ஜாதிக்காய் பொடி
3)பசும்பால்
முருங்கை பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.பிறகு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஜாதிக்காய் பொடி 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி முருங்கை பூ பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்த்து கலக்கி குடித்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இயற்கை வைத்தியம் 02:
1)ஆலமர பழம்
2)ஆலமர விழுது
3)ஆலமர கொழுந்து
இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து வெயிலில் உலர்த்தி காயவைத்துக் பொடியாக்கி கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து காய்ச்சி குடித்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இயற்கை வைத்தியம் 03:
1)சிலா சத்து
2)முட்டை
சிலா சத்து நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை தேவையான அளவு வாங்கிக் கொள்ள வேண்டும்.இந்த சிலா சத்தை மூன்று கிராம் அளவு எடுத்து வேக வைத்த முட்டைக்கு நடுவில் வைத்து சாப்பிடவும்.இப்படி செய்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இயற்கை வைத்தியம் 04:
1)ஜாதிக்காய் பொடி
2)ஆலமர விழுது பொடி
3)தேன்
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலமர விழுது பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இயற்கை வைத்தியம் 05:
1)முருங்கை பருப்பு பொடி
2)பாதாம் பிசின்
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் முருங்கை பருப்பு பொடி மற்றும் பாதாம் பிசினை தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு துண்டு பாதாம் பிசின் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.பிறகு ஒரு கிளாஸ் அளவு பாலில் ஒரு தேக்கரண்டி முருங்கை பருப்பு பொடி மற்றும் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.