காலநிலை மாற்றத்தினால் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் சளி,இருமல்,சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது.சிலர் ஆஸ்துமா மற்றும் காச நோயால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீள கற்பூரவள்ளி,வெற்றிலை,துளசி போன்ற மூலிகைகள் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
1)கற்பூரவள்ளி இலை
2)கருப்பு மிளகு
3)வெற்றிலை
செய்முறை:
முதலில் பத்து கரு மிளகை லேசாக சூடுபடுத்தி உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஐந்து கற்பூரவள்ளி இலை மற்றும் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு தண்ணீர் போட்டு அலசி சுத்தம் செய்யவும்.
பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.ஒரு நிமிடம் கழித்து இடித்த மிளகு,கற்பூரவள்ளி இலை மற்றும் வேப்பிலையை போட்டு குறைவான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
பிறகு இதை ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நுரையீரல் சளி,காச நோய்,ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)கற்பூரவள்ளி இலை
2)தேன்
செய்முறை:
மூன்று கற்பூரவள்ளி இலையை நசுக்கி சாறு எடுக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் கலந்து பருகினால் தொண்டைப்புண்,சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)துளசி
2)கற்பூரவள்ளி இலை
3)ஆடாதோடை இலை
4)கருப்பு மிளகு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 10 துளசி இலை,இரண்டு கற்பூரவள்ளி இலை மற்றும் ஒரு ஆடாதோடை இலை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு ஐந்து கருப்பு மிளகை இடித்து இந்த பேஸ்ட்டில் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா,தீராத சளி,இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.