உலகில் பல பெண்கள் கருப்பை கட்டி பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.இது ஹார்மோன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றாகும்.இந்த பாதிப்பு இருந்தால் உடல் எடை அதிகரிப்பு,ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
இதனால் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இந்த கருப்பை கட்டி பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் உரிய பலன் கிடைக்காது.
இந்த பாதிப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)சோம்பு – ஒரு தேக்கரண்டி
2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)அம்மான் பச்சரிசி இலை – ஐந்து
4)வேப்பிலை – ஒரு கொத்து
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி சோம்பு(பெருஞ்சீரகம்),ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
பிறகு ஐந்து அம்மான் பச்சரிசி இலை மற்றும் ஒரு கொத்து வேப்பிலையை நீர் விட்டு அலசி சுத்தப்படுத்தி கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கப் தண்ணீரை வறுபட்டு கொண்டிருக்கும் கருஞ்சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தில் ஊற்றி சூடு படுத்தவும்.அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள அம்மான் பச்சரிசி இலை மற்றும் வேப்பிலையை அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் கருப்பை கட்டி இயற்கையான முறையில் கரைந்துவிடும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)வெந்தயம்
2)பட்டை
3)துளசி இலைகள்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/2 தேக்கரண்டி வெந்தயம்,ஒரு துண்டு பட்டை மற்றும் 10 துளசி இலைகளை போட்டு கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் கருப்பை கட்டி பிரச்சனை சரியாகும்.