நம் ஊரில் மருத்துவ குணம் நிறைந்த தாவரங்கள் மற்றும் மரங்கள் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி செழிப்பாக வளர்ந்து வருகிறது.சில வகை செடிகள் நாம் அறிந்தவையாக இருக்கும்.அதில் ஒன்று தான் துளசி.இதில் ஏகப்பட்ட மருந்து குணங்கள் அடங்கியிருக்கிறது.துளசி சாப்பிட்டால் சளி தொந்தரவு நீங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் துளசி உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
துளசியில் உள்ள யூஜினால் என்ற வேதிப்பொருள் இருமலை குணமாக்குகிறது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு துளிசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
பிளட் பிரஷர் இருப்பவர்கள் தினமும் துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் பலன் கிடைக்கும்.உடல் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க துளசி இலைகளை நீரில் வேக வைத்து குடிக்கலாம்.
அதேபோல் துளசி சாறில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.இரத்த அழுத்தம் குறைய துளசி இலை,1/4 தேக்கரண்டி சீர்கப் பொடியை ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து வடித்து குடிக்கலாம்.
தோல் தொடர்பான பாதிப்புகள் குணமாக துளசி இலையை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் பூசி வரலாம்.முகத்தில் உள்ள பருக்கள் நீங்க துளசி இலை மற்றும் அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து நீர்விட்டு அரைத்து பூசலாம்.
வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை சரியாக துளசி இலையை ஒரு கப் நீரில் போட்டு ஊறவைத்து குடிக்கலாம்.குளிக்கும் நீரில் துளசி இலைகளை சேர்த்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க தினமும் ஒரு கப் துளசி தேனீர் அருந்தலாம்.