மூக்கின் மேல் காணப்படும் கரும்புள்ளிகள் மறைய இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

0
166
Try this home remedy to get rid of dark spots on nose!!
Try this home remedy to get rid of dark spots on nose!!

மூக்கு பகுதியில் கரும் புள்ளிகள் மற்றும் கருமை காணப்பட்டால் அவை முக அழகை பாழாக்கிவிடும்.எனவே இந்த கருமையை போக்க கீழே சொல்லப்பட்டுள்ள ஹோம் ரெமிடி குறிப்பை பின்பற்றவும்.

தீர்வு 01:

1)எலுமிச்சை சாறு
2)அரிசி மாவு

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை மூக்கை சுற்றி அப்ளை செய்து கைகளால் மசாஜ் செய்யவும்.

அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் மூக்கை கழுவி சுத்தம் செய்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

தீர்வு 02:

1)கற்றாழை ஜெல்
2)சர்க்கரை

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1/2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை மூக்கின் மேல் அப்ளை செய்து க்ளீன் செய்தால் கருமை நீங்கும்.

தீர்வு 03:

1)தக்காளி
2)கஸ்தூரி மஞ்சள் பொடி

ஒரு மீடியம் சைஸ் தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து மூக்கின் மேல் தடவி சிறிது நேரம் கழித்து வாஷ் செய்தால் கருமை நீங்கும்.

தீர்வு 04:

1)தயிர்
2)சர்க்கரை

ஒரு தேக்கரண்டி கெட்டி தயிரில் 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து மூக்கின் மேல் அப்ளை செய்து வந்தால் கருமை நீங்கும்.

தீர்வு 05:

1)தேன்
2)கற்றாழை ஜெல்

ஒரு கற்றாழை மடலில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவு பிரஸ் ஜெல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மூக்கின் மேல் பகுதி மற்றும் ஓரங்களில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வாஷ் செய்தால் கருமை நீங்கும்.

தீர்வு 06:

1)தேங்காய் எண்ணெய்

மூக்கை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் அங்குள்ள டெட் செல்கள் நீங்கிவிடும்.இதனால் மூக்கின் மீதுள்ள கருமை மறைந்துவிடும்.

தீர்வு 07:

1)கடலை மாவு
2)பன்னீர்

ஒரு தேக்கரண்டி கடலை மாவில் சிறிதளவு பன்னீர் அதாவது ரோஸ் வாட்டர் மிக்ஸ் செய்து மூக்கை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருமை நீங்கும்.

Previous articleஅதிக நேரம் மொபைல் லேப்டாப் பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க.. கண் பார்வை போய்விடும்!!
Next article100%உண்மை!! இனி ஆண்கள் டீ காபிக்கு பதில் இதை குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்!!