இந்த பொருள் இருந்தால் அரிசி பருப்பு மாவில் வண்டு பூச்சி வராது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
257
If this substance is present in rice dal flour, beetles will not come!! Try it immediately!!
If this substance is present in rice dal flour, beetles will not come!! Try it immediately!!

காலநிலை மாற்றத்தில் அரிசி,பருப்பு,மாவு போன்ற உணவுப் பொருட்களில் வண்டுகள்,பூச்சிகள் மற்றும் புழுக்கள் வர ஆரம்பித்துவிடும்.குறிப்பாக மழைக்காலங்களில் தான் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகமாகும்.

இனி அரிசி,பருப்பு போன்ற உணவுப் பொருட்களில் வண்டு,பூச்சி மற்றும் புழு வராமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றவும்.

அரசியியில் வண்டு பிடிக்காமல் இருக்க காய்ந்த கஸ்தூரி மேத்தி இலைகளை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை போல் கட்டி வைக்கலாம்.இதன் நறுமணத்தால் வண்டுகள்,பூச்சிகள் வருவது கட்டுப்படும்.

துவரை,உளுந்து,பச்சை பயறு,சுண்டல் போன்ற உணவுப் பொருட்களில் வண்டுகள் வராமல் இருக்க காய்ந்த வரமிளகாய் இரண்டு போட்டு வைக்கலாம்.அதேபோல் அரிசியில் காய்ந்த மிளகாய் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

புளியில் சிறிது கல் உப்பு போட்டு வைத்தால் புழு,பூச்சி பிடிக்காது.சர்க்கரை,வெல்லம் போன்ற பொருட்களில் எறும்பு வராமல் இருக்க இரண்டு கிராம்பை போட்டு வைக்கலாம்.

கோதுமை மாவு,அரசி மாவு போன்ற மாவு ஐட்டங்களில் வண்டு பிடிக்காமல் இருக்க ஒரு காட்டன் துணியில் கல் உப்பு போட்டு மூட்டை கட்டி அதில் போட்டு வைக்கலாம்.

அரிசியில் வண்டு வராமல் இருக்க வசம்பு அல்லது வேப்பிலையை போட்டு வைக்கலாம்.கொத்தமல்லி விதைகளில் வண்டு பிடிக்காமல் இருக்க அடுப்புக்கரி ஒரு துண்டை போட்டு வைக்கலாம்.