பப்பாளி அதிக நபரால் விரும்பக் கூடிய ஒரு மலிவு விலை கனியாகும்.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த மலமிளக்கியாக திகழ்கிறது.இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிரம்பி இருப்பதால் இதை உட்கொள்ளும் போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பழமாக பப்பாளி விளங்குகிறது.சர்க்கரை வியாதி இருப்பவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த பப்பாளி பழத்தை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.தேநீர் அல்லது காபி குடித்த பின்னர் பப்பாளி பழம் சாப்பிட்டால் வாயுத் தொல்லை,வயிறு வீக்கம்,நெஞ்செரிச்சல்,இரைப்பை பிரச்சனை போன்றவை ஏற்படும்.
பால் குடித்த பிறகு பப்பாளி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது பாலில் பப்பாளி பழத்தை கலந்து சாப்பிட்டாலோ வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.சில சமயம் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
முட்டையுடன் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அது மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களுடன் பப்பாளி சேர்த்து சாப்பிட்டால் அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.