மிளகுடன் இந்த ஒரு பொருட்களை போட்டு கசாயம் வச்சி குடிச்சா சுகர் லெவல் சர்ருனு குறைந்துவிடும்!!

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை நீரிழிவு நோய் என்கிறோம்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும்.

இரத்த சர்க்கரை அறிகுறிகள்:

*அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
*உடல் சோர்வு
*தலைவலி
*கண் பார்வை குறைபாடு
*உடல் எடை குறைதல்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் இயற்கை வைத்தியம்

தேவையான பொருட்கள்:

1)இலவங்கப்பட்டை – ஒரு துண்டு
2)மிளகு – நான்கு
3)தண்ணீர் – ஒரு கப்

பயன்படுத்தும் முறை:

முதலில் ஒரு துண்டு பட்டையை எடுத்து உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் நான்கு கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

இப்பொழுது எடுத்த மிளகு மற்றும் இலவங்கப்பட்டையை கொதிக்கும் நீரில் போட்டு 5 முதல் 10 நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)இன்சுலின் இலை – சிறிதளவு

பயன்படுத்தும் முறை:

முதலில் வெந்தயத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் ஒரு இன்சுலின் இலையை பறித்து தணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.இந்த இலையுடன் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1)தண்ணீர்
2)வெண்டைக்காய்

பயன்படுத்தும் முறை:

ஒரு அகலமான கிண்ணத்தில் இரண்டு பிஞ்சு வெண்டைக்காயை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதன் காம்பு பகுதியை வெட்டி அகற்றிவிடவும்.அதன் பின்னர் ஒரு டம்ளரில் தண்ணீர் நிரப்பி வெண்டைக்காயை அதில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.மறுநாள் இந்த வெண்டைக்காய் நீரை பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.