நகர் புறங்கள் மட்டுமின்றி கிராம புறங்களிலும் பாக்கெட் பால் பயன்பாடு அதிகரித்து விட்டது.ஆவின்,ஆரோக்கியா என்று பல பிராண்டுகளில் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது.
பாலின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படும் பாக்கெட் பாலை இன்று பெரும்பாலனோர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.டீ,காபி,பனீர்,பாலாடை கட்டி,பால்கோவா போன்ற பலவற்றை செய்வதற்கு பாக்கெட் பால் பயன்படுகிறது.நம் தமிழகத்தை பொறுத்தவரை ஆவின் பாலை தான் அதிகப்படியான மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்த பாக்கெட் பாலில் இருந்து காபி,டீ மற்றும் பானங்களை செய்ய முதலில் அதை கொதிக்க வைப்பது வழக்கம்.
பாலை நன்றாக காய்ச்சிய பிறகு குடிக்க வேண்டுமென்பது பலரின் அறிவுரை.ஆனால் பாக்கெட் பாலை காய்ச்சாமலும் குடிக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.பாலில் பதப்படுத்தப்பட்ட பால்,பாதப்படுத்தாத பால் என்று இரு வகை இருக்கிறது.இதில் பதப்படுத்தபட்ட பாலை காய்ச்சாமலே பயன்படுத்தலாம்.இந்த பதப்படுத்தப்பட்ட பாலை காய்ச்சினால் அதில் இருக்கின்ற ஊட்டத்துக்கள் நீங்கிவிடும்.
பொதுவாக பாலை காய்ச்சினால் அதில் இருக்கின்ற நுண்கிருமிகள் அழிந்துவிடும்.அதோடு மூலக்கூறுகள்,புரதங்கள்,போன்றவை சிதைடைந்து செரிமானம் ஆவதை தாமதப்படுத்தும்.சிலர் பாலை சுண்டக் காய்ச்சி குடிப்பார்கள்.பாலை அதிக நேரம் கொதிக்க வைத்தால் அதில் கொழுப்புச்சத்து அதிகமாவதோடு ஒரு இனிப்பு சுவை கிடைக்கும்.இப்படி பாலை காய்ச்சினால் அதிக நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
ஆனால் பதப்படுத்தப்பட்ட பாலை காய்ச்ச வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பாலை பதப்படுத்தும் போது போதுமான அளவு வெப்பமாக்கிவிடுவதால் அதை மீண்டும் காய்ச்சி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படாது.இந்தியாவில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பால்கள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவை என்றாலும் அவை முறையான பராமரிப்பு இன்றி விறக்கப்படும் போது காய்ச்சி பயன்படுத்துவதில் தவறில்லை.